Tuesday, February 17, 2009

சிந்திக்க வைக்கும் தமிழ் திரைப்படங்கள்

மிழினத்தின் சமூதாய சீர்கேட்டிற்கு ஒரு பெரும் காரணகர்த்தா தமிழ் சினிமா என்ற கூற்று பலரிடையே பரவி வரும் இவ்வேளையில், இன்றும் பலரை சிந்திக்க வைக்கும் வகையில் சில தமிழ் திரைப்படங்கள் வெளிவரவே செய்கின்றன. அவைகளில் சிலவற்றை என் கருத்துக்கு ஒப்ப வகைப்படுத்தியுள்ளேன். இதனையொட்டி தங்களுடைய கருத்து எதுவாக இருப்பினும் அதனை என்னிடம் தெரிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தசாவதாரம் : ஒவ்வொரு நிகழ்வும் ஏற்பட ஏதாவதொரு காரணம் உண்டு என்பதனை இத்திரைப்படம் கூறிற்று. சுனாமி ஏற்பட்ட பொழுது கடவுளே இல்லை என பலரும் புலம்பிய பொழுது, சுனாமி ஏற்பட்டதும் ஒரு நல்லதுகே என்ற கருத்தை இத்திரைப்படம் முன்வைத்தது.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது,
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது,
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.



இந்த வரிகள் பகவத் கீதையில் வரும் ஒரு சாரமாகும். இதனை பலரும் கீதாச்சாரம் என்று கூறுகின்றனர். மொத்த பகவத் கீதையும் இந்த மூன்று வரிகளில் அடங்கிவிட்டது.

விருமாண்டி : ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்வில் ஏதாகிலும் தவறு செய்திருப்பான். சில தெரிந்து செய்வது, சில தெரியாமல் செய்வது. எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய கருத்தினை கூறும் போது, அது மாறுப்பட்ட எண்ணங்களை வெளிப்படுத்தும் என்பதனை இத்திரைப்படம் காண்பித்துள்ளது. மேலும் ஒரே சூழல் இருவருடைய விளக்கத்தின்படி வெவ்வேறு விதமாக மாறுபடும் என்பதனையும் இங்கு கூறப்பட்டுள்ளது.

அன்பே சிவம் : அனுபவ கல்வியின் முக்கியத்துவம், அன்பின் சிறப்புத்தன்மை, சூழ்நிலைக்கேற்ப ஒத்துப்போகுதல், ஆகிய கருத்துகளை இத்திரைப்படம் வெளிப்படுத்தியுள்ளது. தற்போதய இயந்திர வாழ்க்கையில், மனிதாபிமானம் எவ்வளவு அழிந்துள்ளது என்பதும் இங்கு கூறப்பட்டுள்ளது. மன்னிக்கும் மனப்பான்மை எவ்வளவு சிறந்தது என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

புதியக் கீதை : ஒவ்வொரு மனிதனும் தன்னம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் என்றக் கருத்தை இத்திரைப்படம் வெளிப்படுத்தியுள்ளது. வாழ்க்கை வாழ்வதற்கே, போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து, நல்லதே நினை நல்லதே நடக்கும் போன்ற சமுதாய கருத்துகளை இந்த படத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். அனைவராலும் நேசிக்கப்படும் பொழுது ஒருவனை மரணம்கூட தீண்ட யோசிக்கும் என்று இங்கு அழகாக குறிப்பிடப்பட்டுள்ளத

தமிழ் சினிமா மேலும் சிந்திக்கும்.......

0 கருத்துக்கள்: